Pages

Sunday, 24 November 2013

சித்தரும் லிங்கமும் - ஒரு சிந்தனை

திருவண்ணாமலை கீழே உள்ள அடி அண்ணாமலை கோவிலுக்கு உள்ளே சென்றால் ஒரு மெல்லியதான அதிர்வை உணர முடியும். இது பூமிக்கு உள்ளே உள்ள நெருப்பு குழம்பினால் (லாவா) ஏற்படும் மாற்றங்களினாலோ அல்லது பூமி பரப்பில் (earth crust) ஏற்பட்டு கொண்டிருக்கும் மாற்றங்களினாலோ இந்த அதிர்வுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கலாம். இந்த இடத்திற்கும் திருவண்ணாமலை (Hills) உருவானதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இடங்களில் நெருப்பு குழம்பு வந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

பஞ்ச பூதங்களில், அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை சொல்ல படுகிறது. இந்த இடங்களில் அக்னி குழம்பு வெளியேறி அது மூலமாக இங்கே உள்ள மண்ணில் உலோகங்களும், தாதுக்களும் அதிகமாக இருக்கிறது.. இங்கு உள்ள உலோகங்களையும், தாதுக்களையும் அருகே உள்ள செடி கொடிகள் எடுத்து கொண்டு அவைகளை உருமாற்றி தனக்குள்ளே கொண்டிருப்பதால் இந்த செடி கொடிகள் மருத்துவ குணங்களை கொண்டு மூலிகைகளாக உள்ளன. எனவே சித்தர்கள் உலோகங்களையும், தாதுக்களையும், மூலிகைகளையும் ஆராய சிறந்த இடமாக திருவண்ணாமலையை தேர்வு செய்து உள்ளனர். இவற்றில் பத்ரகிரி மிக மிக முக்கியமான இடமாகும்.

இது போன்ற இடங்களில் உள்ள செடி கொடிகள் (exotic/medicinal plants) அங்கே கிடைக்கும் உலோகங்களையும், தாதுக்களையும் எடுத்து உருமாற்றம் செய்தோ அல்லது அதன் நச்சு தன்மையை குறைத்தோ தனக்குள்ளே சேமித்து வைத்து, மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை ஆகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து கொண்ட சித்தர்கள் இதை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து தாவரங்களை பயன் படுத்தி உலோகங்களை உருமாற்றி மருந்துகளாக உபயோக படுத்தும் முறைகளை கண்டு அறிந்தனர். எனவே உலோகங்கள், தாதுக்கள், மூலிகைகள் நிறைந்த இடங்களை தேர்வு செய்து அங்கேயே தங்கி தமது ஆராய்சிகளை செய்தனர்.

பூமிக்கு வெளியே சிறிய அளவோ பெரிய அளவோ நெருப்பு குழம்பு வெளியே வந்து வழிந்து குளிரும் போது அது லிங்க வடிவில் பாறையாக அமையும். இதுவே லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி உள்ள மணற் பரப்பில் உலோகங்களும், தாதுக்களும், மூலிகைகளும் நிறைய இருக்கும். லிங்க வடிவை சிவனே முதலில் கண்டுபிடித்து உபயோக படுத்தபட்டதால் சிவலிங்கம் என பெயரிட பட்டிருக்கலாம்.




இதே நடைமுறையால் எங்கெங்கு உலோகங்களோ அல்லது தாதுக்களோ அல்லது மூலிகைகளோ இருக்கும் இடங்களில் லிங்கங்களை வைத்தனர். இது ஒரு சித்தர் அடுத்த சித்தருக்கு ஆராய்ச்சி செய்யும் இடமாக காண்பிக்க உபயோகப் பட்டது. எங்கெங்கு லிங்கங்கள் உள்ளதோ அங்கு குடிலோ, மண்டபங்களோ உருவாக்கப் பட்டது. இது லிங்கங்களை சிதையாமல் காப்பாற்றவும் இங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உபயோகப் பட்டது. இவற்றில் சில கோவில்களாகவும் மாறியது.

இந்த லிங்கங்களை தேய்வதில் மற்றும் சிதைவதில் இருந்து பாதுகாக்கவும், குளிர வைக்கவும் அதன் மேல் நீர், பால், தேன் போன்ற திரவங்களை தொடர்சியாக ஊற்றி லிங்கங்களை பாதுகாத்து வந்தனர். தேனில் உள்ள மெழுகு இந்த லிங்கங்களை கறையாமல் பாதுகாக்க உதவியது. இதுவே அபிஷேகம் ஆகும். இது போலவே பின்னாளில் உருவாக்கப் பட்ட கற் சிலைகள் பாதுகாக்க பட்டது.

இந்த லிங்கம் மற்றும் சிலைகளின் மீது அபிஷேகங்கள் செய்யும் போது வழியும் திரவங்களோடு சிலைகளில் இருந்து நுண்ணிய துகள்கள் கலந்து வரும். இதன் மருத்துவ குணங்களை அறிந்து சித்தர்கள் இந்த நீரை மக்களுக்கு அபிஷேக நீராக அருந்தும் பழக்கத்தை உருவாக்கினர்.
  
இது போன்ற இடங்களை சுற்றி உள்ள மருத்துவ பலன்களை, மக்கள் அடைய இந்த இடங்கள் கோவில்களாக்க பட்டது இது போனற கோவில்களுக்கு மக்கள் சென்று வரும் பழக்கங்கள் உருவாக்க பட்டன.

உலோகங்களையும், தாதுக்களையும், மூலிகைகளையும் ஆராய்ச்சி செய்து உருவாக்கப்பட்ட மருந்து மற்றும் உணவின் நச்சு தன்மை அறிய காக்கைக்கு வைத்து பரிசோதிக்க பட்ட்து. இந்த acute poisoning   கண்டு அறிய காக்கைகள் பெருமளவில் பயன்படுத்த பட்டது. நாளடைவில் இந்த பழக்கமே உணவுக்கு முன் காக்கைகளுக்கு உணவு வைக்கும் பழக்கமாக உள்ளது.


அறிமுகம்


அன்புடையீர்,

என்னுடைய சிந்தனைகளை
        எனது நண்பர் திரு. Dr. T.S. குமாரவேல், MD, PhD, UK,
எனது மகன் செல்வன். ஆதித்தியன்
ஆகியோருடன் கலந்தாலோசித்து புது கருத்துக்களை பெற்று மொத்தமாக இங்கே அளித்துள்ளேன். எங்களுடைய கருத்துக்களுக்கு நவீன விஞ்ஞான அறிவையும் சிந்தனையையும் அளித்து பேருதவி செய்யும் திரு. Dr. குமாரவேல் அவர்களுக்கு எனது நன்றி கடன் உரித்தாகுக.
உங்கள்
Dr. S.S. முருகன், PhD

சிந்திப்போம்...