இன்றைய நவீன
மனித இனம்
Homosapians என்று அழைக்கப்
படுகிறது. மனித பரிணாம வளர்ச்சியில்
(Human evolution) Homosapianக்கு சற்றே முன்
இருந்த இனங்களில் ஒன்று
Neanderthal (நியான்டர்தால்) மனிதன்
என்று அழைக்கப்
படுகிறது. நியான்டர்தால் மனிதன்,
உருவ அமைப்பு,
structure, brain size ஆகியவை homosapianக்கு பொருந்துகிறது. நியான்டர்தால் மனிதன்
இன்றைய மனிதனை
விட உடல்
வலிமை அதிகமாக
இருந்து இருக்கிறான்.
ஆனால் அறிவு
கூர்மையிலும் புத்திசாலிதனத்திலும்
நியான்டர்தால் மனிதன் இன்றைய
homosepianஐ விட
குறைந்தே இருந்து
இருக்கிறான்.
நியான்டர்தால் மனிதன் அழிவிற்க்கு
பல காரணங்கள்
சொல்லப் பட்டாலும்
homosapian ஒரு முக்கிய
காரணம்.
ஒரு இனத்தை அல்லது
ஒரு பிரிவை
இன்னொரு இனம்
அல்லது பிரிவு
அழிக்கும் எண்ணம்
அந்த காலத்திலேயே
இருந்து இருக்கிறது.
அது இன்று
வரை தொடர்கிறது.
தனி தனி
பிரிவாக உலகம்
முழுவதும் வாழ்ந்து
வந்த ஆரம்ப
கால நவீன
மனிதன், ஒரு
பிரிவு மற்றொரு
பிரிவை சந்திக்கும்
பொழுது அதை
தாக்கி அழிக்கும்
வழக்கம் இருந்து
உள்ளது.
உணவு அல்லது வசதிகளுக்காக மட்டுமே
இந்த அழித்தல்
நடந்து இருக்க
வாய்ப்பு இல்லை.
ஒவ்வொரு பிரிவும்
தங்களுக்கென்று தனி
பழக்க வழக்கங்கள்
நம்பிக்கைகள் மற்றும்
உடை (?) அமைப்புகள்
பின்பற்றி வந்ததால்
ஒரு பிரிவுக்கு
மற்றொரு பிரிவை
சகித்துகொள்ள முடியவில்லை.
இது போல
ஒரு பிரிவை
மற்றொரு பிரிவு
வெவ்வேறு முறைகளில் தாக்கி அழிக்கும்.
அதன் பின் ஒரு
பிரிவு மற்றொரு
பிரிவை தாக்கி
அடிமையாக்கும் வழக்கம்
இருந்து உள்ளது.
தங்களது பல்வேறு
விதமான தேவைகளுக்கு
இன்னொரு பிரிவை
அடிமையாக்கினர். இதற்காகவே
மனித அடிமை
சந்தைகள் நிறைய
இருந்தன. இது
போன்ற அடிமைகள்
பொதுவாக நன்றாக
நடத்தப்படுவது இல்லை.
ஒரு அடிமையும்
தன்னை போல்
சக மனிதன்தான்
என்ற எண்ணம்
அவர்களுக்கு ஏற்படவில்லை.
தங்கள் இனமே அல்லது
பிரிவே அனைத்தையும்
control செய்ய நினைத்து,
மற்ற அனைவரையும்
தமக்கு கீழ்
கொண்டு வந்து
உள்ளனர். இந்த
பிரிவோ அல்லது
இனமோ சற்றே
விரிவடைந்து அரசுகளாக
முன்னேறியது.
ஒவ்வொரு அரசும் தன்னை
காத்துக் கொள்ள
போர் வீரர்களை
உருவாக்கினர். இதில்
எந்த பிரச்சனையும்
இல்லை. ஒவ்வொரு
அரசும் தங்களது
வளங்களை பெருக்கி
மற்ற அரசுகளோடு
வியாபாரம் செய்து
அனைவரையும் நன்றாக
வாழ வைக்க
முடியும். ஆனால்
ஒவ்வொரு அரசரும்
தனது அரசின்
ராணுவ பலத்தை
போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்தனர். அதன்
பின் தன்
ராணுவ பலத்தை
உபயோகித்து மற்ற
நாடுகளை தாக்கி
அதை வெற்றி
கொண்டு தன்
அரசோடு சேர்ப்பது
காலம் காலமாக
நடந்த்து வருகிறது.
அது மட்டும்
இன்றி தோல்வியுற்ற
நாடுளை சூறையாடி,
கொள்ளை அடித்து,
கொலை செய்து
தங்கள் வெறியை
தீர்த்து கொள்வர்.
தன்னுடைய நாடு பிடிக்கும்
ஆசையை, தனது
தேச எல்லைகளை
விரிவு படுத்தும்
ஒவ்வொரு அரசரும்
லட்சியமாகவே கொண்டனர்.
அதிக நாடுகளை
வென்று தன்னுடைய
அரசை பெரிதாக்கி
வந்ததை வரலாறு
பாராட்டுகிறது. இது
போன்ற அரசர்களை
பேரரசர், சக்கரவர்த்தி,
மாவீரன், ஜகம்பனா, சுல்தான்
என்று பெரிதாக
கொண்டாடினர். ஆனால்
இதற்காக எத்தனையோ
உயிர்கள் கொல்லப்பட்டு
நாடுகள் சூரையாடப்
பட்டன. சில நகரங்கள்
எரிக்கப் பட்டன,
அனைத்து செல்வங்களும்
கொள்ளை அடிக்கப்
பட்டன.
எந்த தேச எல்லையும்
இதுவரை நிரந்தரமாக
இருந்தது இல்லை.
சில சக்ரவர்த்திகளால்
தேச எல்லைகள்
பெரிதாக்க படும்
அதற்கு பின்
துண்டு துண்டாக
போன சரித்திரம் இருக்கிறது. ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகளாக
தனது எல்லைகளை
விரிவு படுத்தவும்
அல்லது பாதுகாக்கவும்
நிறைய அரசுகள்
போரிட்டு கொண்டே
இருந்துள்ளன. இதனால்
ஏற்படும் அழிவுகளையும்
கொடுமைகளையும் சரித்திரம்
பெரிதாக நினைக்காமல்
பெரும் வெற்றி
பெற்றவர்ளை கொண்டாடி
வருகிறது.
இன்றைய கால கட்டத்திலும்,
சில நாடுகளுக்கு
இடையே போர்
நடந்து கொண்டு
தான் இருக்கிறது.
இன்னும் சில
நாடுகளில் ஆளும்
படையினருக்கும் அதை
எதிர்க்கும் படையினருக்கும்
தொடர்ந்து உள்
நாட்டு யுத்தம்
நடந்து கொண்டே
இருக்கிறது. இதனால்
மக்கள் அழிவதும்
நாட்டின் வளங்கள்
நாசமாவதும் தவிர
வேறு ஒன்றையும்
சாதிக்க முடிவது
இல்லை. அது
மட்டும் இன்றி
இந்த நாட்டின்
பொருளாதாரம் கடுமையாக
பாதிக்க படுகிறது.
இந்த அடக்கி ஆளும்
வெறி தேச
அளவில் மட்டும்
நின்று விடுவது
இல்லை. இந்த
போராட்டம் இனங்களுக்குள்
நடக்கிறது. மதங்களுக்குள்
நடக்கிறது. ஜாதிகளுக்குள்
நடக்கிறது. மொழிகளுக்குள்
நடக்கிறது. எந்த
ஒரு பிரிவும்
தனி பட்ட
மனிதர்களின் அதிகாரத்தை
சேர்ந்தது இல்லை.
ஆனால் இந்த
காரணங்களை காட்டி
அடிமை படுத்தும்
வழக்கம் மனித
இனத்திடையே இன்றும்
இருக்கிறது.
இது போன்ற போராட்டங்களுக்கு
தேச எல்லையோ,
மதமோ, மொழியோ,
இனமோ, நிறமோ நிச்சயம்
காரணம் இல்லை.
இது முழுக்க
முழுக்க மனித
குலத்தின் அடிமை
படுத்தும் வெறியாகும்.
இது குறைந்தது
50,000 ஆண்டுகளாக நடைபெற்று
வருகிறது. இந்த
அடிமைப் படுத்தும்
வெறி மனிதருக்கோ
அல்லது ஒரு
பிரிவுக்கோ இருக்கும்
போது, ஏதாவது
ஒரு காரணத்தை
எடுத்து கொண்டு
மற்றவர்கள் மீது
தாக்குதல் நடத்துகின்றனர்.
இது போன்ற
எண்ணம் உடைய
மனிதர்களால் அடுத்தவர்களுக்கு
கொடுமை செய்யாமல்
இருக்க முடியாது.
இது முழுக்க
முழுக்க ஒரு
மன வியாதி
ஆகும். இதை
உணர்ந்து கொள்ளாமல்
மொழி, இனம்,
மதம், நிறம் ஆகியவற்றை
மட்டும் காரணம் சொல்வதனால்
பலன் ஏதும்
இல்லை. மனிதனின்
அடிமை படுத்தும்
வெறி அழியாமல்
இருக்குமானால் இந்த
கொடுமைகள் தொடர்ந்து
நடந்தே தீரும்.