Pages

Sunday 5 November 2017

எது ஆத்திகம்? எது நாத்திகம்?



ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் உள்ள அர்த்தம் சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை. அன்று இந்தியாவை பொறுத்தவரை 1) வேதங்களை ஏற்றுக் கொள்பவர்களும், 2) ஈஸ்வரனையோ அல்லது விஷ்ணுவையோ ஏற்றுக் கொள்பவர்களும், 3) ஆத்மா இருப்பதை ஏற்றுக் கொள்பவர்களும் ஆத்திகர்கள் ஏன்று அழைக்க பட்டனர். இந்த மூன்றையும் ஏற்று கொள்ளாதவர்களை நாத்திகர் என்று அழைக்க பட்டனர். அதிலும் குறிப்பாக வேதங்களை நம்பாதவர்கள் நாத்திகர் என்றனர்.

வேதங்களை கடைபிடிக்காத பிற தத்துவங்களை, நம்பிக்கைகளை நாத்திகம் என்றே சொல்லப் பட்டது. புத்த, ஜைன, சார்வாக (saarvaga) மற்றும் அஜிவிக்க (ajivikka) தத்துவங்கள் நாத்திகமாக கருதப்பட்டன. புத்தர் வேதங்களை ஏற்றுக் கொள்ளாததால் புத்த மதத்தினர் நாத்திகர்களாக அழைக்கப்பட்டனர்.

புத்த மதம் நாத்திகமாக கருதப் பட்ட அதே நேரத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக சில இந்து வழிமுறைகளில் சொல்லப் பட்டு இருக்கிறது.

இன்னொருபுறம், இந்திய தத்துவ அடிப்படையில் நியாய (neyaya), வைசேசிக (vaisesiga), சம்க்ய (samkhya), யோக (yoga), மைமாம்ச (mimamsa), மற்றும் வேதாந்தா (vedhantha) என்று ஆறு பிரிவுகளாக ஆத்திகம் கற்கப் பட்டது.

முன்பு, ஆத்திகம் என்றால் தீஸம் (theism), நாத்திகம் என்றால் அதீஸம் (atheism) என்று சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் அது போல புரிந்து கொள்ள படுகிறது. ஆனால் இது சரியான அர்த்தம் அல்ல. உதாரணத்துக்கு சம்க்கிய தத்துவம் ஆத்திகத்திலும் நாத்திகத்திலும் சேர்க்கப் பட்டு இருந்தது.

குறைந்தது ஒரு தெய்வம் உள்ளது என்று ஆத்திகம் (தீஸம்) நம்புகிறது.

வரலாறுக்கு முந்தய காலத்தில், நாகரீகம் உருவாகாத காலத்தில் விலங்குகள் வழிபாடு, மூதாதயர் வழிபாடு, இயற்கையை வணங்குவது போன்ற வழக்கம் இருந்தது. இந்த உருவகங்கள் உண்மையில் இருப்பதால் நம்புவதற்க்கும், வணங்குவதற்கும் ஆதாரம் தேவைப் படாமல் இருந்தது.

ஒரு தீஸ்ட் (theist), எப்படி கடவுள் நம்பிக்கை கொள்கிறார், ஏன் இந்த நம்பிக்கை, எவ்வளவு உறுதியாக உள்ளார் என்பது போன்ற காரணங்கள் தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது என்று விளக்கத்தை தீஸம் எதிர் பார்க்கவில்லை. கடவுளை நம்புவது ஒன்றே தீஸத்தின் அடிப்படை. அதற்கு மேல் ஆராய்ந்து பார்க்க வழிகளை பெரும்பாலும் வைப்பது இல்லை.

கடவுள் நம்பிக்கை அனைத்தும் ஒரே மாதிரி இல்லை. வேறு வேறு காலங்களில் வேறு வேறு கடவுள்கள், அது போல ஒரே காலத்தில் வேறு வேறு கடவுள்கள்.

தீஸ்ட் (theist) -ல் ஒரு பிரிவு கடவுள் அனைத்தையும் படைத்து அவரே நிர்வகிக்கிறார் என்று நம்புகின்றனர். அதே நேரத்தில் தெய்வீக வெளிப்பாடுகளை நம்புவது இல்லை.

ஒரு டெயிஸ்ட் (deist) கடவுள் அனைத்தையும் படைத்தார், ஆனால்  அவரே நிர்வகிக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வது இல்லை. கடவுள்  அனைத்தையும் படைத்து சில மாற்ற முடியாத விதிகளை அமைத்து படைத்தவர் தேவை படாமலே இயங்கும் படி செய்திருக்கிறார் என்றும் நம்புகின்றனர்.

ஓரு அதீஸ்ட் (atheist), கடவுள் என்பதையே நம்புவதில்லை. அவரே அனைத்தையும் நிர்வகிக்கிறார் என்பதையே நம்புவதில்லை.

யதார்த்தவாதிகள், கடவுள் இருப்பதை நம்புகிற சரியான ஆதாரங்கள் தற்சமயம் இல்லை என்று நம்புகிறார்கள். யதார்த்தவாதி தீஸ்ட் ஆகவும் அதீஸ்ட் ஆக இருக்க முடியும்.

யதார்த்தவாதி-தீஸ்ட்கடவுள் இருப்பதை நம்புவர் ஆனால் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ”யதார்த்தவாதி-அதீஸ்ட்கடவுள் இல்லை என்பதை நம்புவர் ஆனால்,  கடவுள் இல்லை என்று முடிவு செய்ய ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒரே ஒரு கடவுளை நம்புவது மோனோதீஸம் (monotheism).  பல கடவுள்களை நம்புவது பாலிதீஸம் (polytheism), கடவுள் அகிலம் முழுவது இருக்கிறார், கடவுளும் அகிலமும் ஒன்று என்று நம்புவது பான்தீஸம் (pantheism).

ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்க வேண்டும், மற்ற கடவுள்கள் வணங்குவதற்கு உரியது அல்ல என்பது ஒரு சாரார் நம்பிக்கை. நிறைய கடவுள்களை நம்பினாலும் ஒரே ஒரு கடவுளை மட்டும் வாழ் நாள் முழுக்க வணங்குவது மற்றொரு சாரார் நம்பிக்கை. அல்லது காலத்திற்கேற்ப வேறு வேறு கடவுளை வணங்குவது சிலரின் நம்பிக்கைகள்.

ரூப, அரூப, இயற்கையான, அமானுஷ்யமான தெய்வ நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாத்திகர்கள் என்பது பொதுவான கருத்து. ஒரு சமயம் அல்லது பிரிவு மற்ற பிரிவை நாத்திகம் என்று சொல்லப்பட்டதும் உண்டு. நம்பிக்கை வேறு பட்டவர்களையும் நாத்திகராக கருதப் பட்டனர்.

பூமத்திய ஆப்ரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் வசிக்கும் உயரம் குறைந்த சில பழங்குடி இன மக்கள் எந்தவித சடங்கு முறைகளும் இல்லாமல் இருக்கின்றனர் என்று வில் டுரன்ட் (Will Durant) (Durant's Our Oriental Heritage) குறிப்பிட்டு உள்ளார். அவர்களிடையே கடவுள், தேவதைகள், ஆவிகள் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை.  அவர்கள் இறந்தவர்களை எந்த சடங்கும் இல்லாமல், எந்த பூஜையும் இல்லாமல் புதைக்கின்றனர். எந்த ஒரு சிறு மூட நம்பிக்கைகள் கூட அவர்களிடம் இல்லை.

தீஸம், பல்வேறு விதமான மத நம்பிக்கைகளை உள்ளடக்கி உருவாகியது. ஆனால், மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வது  ஓரே ஒரு கடவுளையாவது நம்ப வேண்டும் என்பதே. ஒரு கடவுளை மட்டும் நம்பி பிற கடவுள்களை நம்பாதவர்களும் ஒரு வகையில் அதீஸ்ட் ஆகும். அதே நேரத்தில், ஒரு கடவுளை மட்டும் நம்பியது அனைத்து கடவுள்களையும் மறுப்பதாக ரோமானியர்கள் கருதினர். அது மட்டுமன்றி, அவர்களை நாத்திகர்களாக நம்பினர்.

கிருஸ்துவர்கள் ஒரே ஒரு கடவுளை நம்புவது மிக வித்தியாசமாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாலும் இருந்ததால் ரோமானியர்களால் கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக பல கிருஸ்துவர்கள் கொல்லப்பட்டனர்.

நாத்திகர்களும், வேறு மதத்தை சார்ந்தவர்களும், உலகம் முழுவதும் துன்புறுத்தப் படுகின்றனர். பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேஷியா, குவைத், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான் நாடுகளில் நாத்திகம் பேச அனுமதி இல்லை. வேறு மதங்களும் வளர முடியவில்லை. ஆப்கானிஸ்தான், ஈரான், மாலத்தீவுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நாத்திகர்கள் மரண தண்டணை அடையும் சூழ் நிலை உள்ளது. இன்னும் சில நாடுகளில் வேறு மதங்களை பின் பற்ற அனுமதிப்பதில்லை.

ஆத்திகம், நாத்திகம் இரண்டும் ஒருவருடைய நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், எது, ஆத்திகம் எது நாத்திகம் என்று தெளிவாக தெரியாமலும், தான் தன் கடவுளை, தன் நம்பிக்கைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், கடை பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, வலியுறுத்துவது சரித்திரம் முழுவதும், காணப்படுகிறது.

ஆத்திகம், நாத்திகம் பற்றிய தெளிவான ஞானம் பெரும்பாலான பிரச்சனைகள் எழாமல் இருக்க உதவி செய்யும்.