Pages

Sunday 8 December 2013

ஆண்டவரா, கடவுளா ?


நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தவர் கடவுள் மற்றும் ஆண்டவர் என்று நம்பப்படுகிறது. ஆனால் படைத்தவருக்காக கூறப்படும் இலக்கணங்கள் படி கடவுள் என்பது வேறு, ஆண்டவர் என்பது வேறு. ஆண்டவர் என்று நாம் வழிபடுவது என்றொ, எங்கொ, எப்பொழுதோ நம்மை ஆட்சி செய்தவர்கள். நம்மை ஆள்பவர்களை கடவுள்களுக்கு சமமாகவோ அல்லது அடுத்ததாகவோ வைத்து வணங்கி வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்து வந்தது. அந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களில் சிறப்பாக ஆட்சி செய்தவர்களையும், தமது மக்களை வெகு சிறப்பாக வழி நடத்தி வந்தவர்களையும் மக்கள் வணங்கி வரும் பழக்கம் இருந்த்து. இவர்களையே ஆண்டவர்களாக மக்கள் வழி படுகின்றனர். 

அனைத்தையும் படைத்தாக கூறப்படும் கடவுள்களுக்கும் இந்த ஆண்டவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. மக்கள் ஆண்டவர்களை வணங்கியது நன்றிக்காக, கடவுளை  வணங்கியது காப்பதற்காக. மக்கள் தாம் வணங்கியவர்களை நாளடைவில் வழி பட தொடங்கினர். இந்த பழக்கதினாலேயே கடவுள் எது, ஆண்டவன் எது என்று வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. இன்று கடவுள்களாக வழி படுபவர்கள் பெரும்பாலும் ஆண்டவர்களே. கடவுள்களுக்கும், ஆண்டவர்களுக்கும் உள்ள வித்யாசங்கள் சரி வர நிர்ணயிக்க படாததால் அனைவரையும் மக்கள் வழி பட தொடங்கினர். 

அந்நாளில் ஆட்சி செய்த தலைவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகிய ஆண்டவர்களை பற்றிய காலம் நேரம், தேசம் ஆகிய விவரங்கள் சரித்திரத்தில் இடம் பெறாததால் அவர்களை பற்றிய முழு விவரங்களை நம்மால் இன்றைக்கு அறிந்து கொள்ள முடியாமல் போனது. இவர்களில் சிறந்தவர்களை மக்கள் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வணங்கி, பின்னர் வழி பட்டதால் இன்றும் ஆண்டவர்களாக மக்கள் வணங்கி வருகின்றனர்.

காட்டு வாசிகளாக இருந்தது முதல் நவ நாகரீகமான இந்த காலம் வரை நடை பெற்ற மாற்றங்களில், உடையில் ஏற்பட்ட மாற்றங்களும் மிக முக்கியமானது ஒன்று. உடைகளை வைத்து அவர் எந்த கால கட்டத்தை சேர்ந்தவராக இருக்க முடியும் என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை போலவே ஆடை, அணிகலங்களை வைத்து அவர்கள் எந்த பகுதியை அல்லது கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் காட்டு வாசிகளாக இன்றைக்கும் வாழ்ந்து வருபவர்களிடையே பெரியதொரு மாற்றம் இல்லை. ஆனால் நாகரீகம் வளர, வளர ஆடை, ஆபரணங்களில் மாற்றம் பெரிதளவில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. 

நம்மை ஆண்ட ஆண்டவர்களின் உருவங்களை சிலையாக செதுக்கியோ, ஓவியமாக வரைந்தோ இருந்திருந்தால் அவர்களின் ஆடை, அணிகலன் மற்றும் ஆயுதங்கள் வைத்து அவர்கள் எந்த கால கட்டத்தை சேர்ந்தவர்கள் என்று நம்மால் யூகிக்க முடியும். ஆனால், இவர்களை பற்றிய தோற்றங்களை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் இது பற்றிய கால கணிப்பை செய்ய முடியாது. எனவே சரித்திர சான்றுகள் சரியாக இருக்கும் போது இந்த ஆண்டவர்களை பற்றிய காலமும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் நம்மால் கணிக்க முடியும்.        

Model Photos


No comments:

Post a Comment