Pages

Sunday 15 December 2013

கடவுள், மொழி, மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. 

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


1 comment:

  1. Interesting. God, Language, Religion always debatable topics to understand our origin. Keep doing good things

    Dr.Arulmozhivarman

    ReplyDelete