Pages

Sunday 19 January 2014

சம்ப்ரதாயங்கள் – காலங்களை கடந்த ஒரு பார்வை

சம்ப்ரதாயங்கள் பற்றி நேர்மையாக புரிந்து கொள்ள செய்யப்பட்ட முயற்சியே  “சம்ப்ரதாயங்கள் – காலங்களை கடந்த ஒரு பார்வை”. 
 
ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது, இவை இரண்டில் ஒன்றை செய்வதற்க்கு முன் நன்றாக புரிந்து கொண்டு முடிவெடுப்பது நலமாகும்.
 
சம்ப்ரதாயங்கள், இன்றைய சூழ்நிலையில், அனுபவ (பழைய) தலைமுறைக்கும், புதிய தலைமுறைக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. கட்டாயப்படுத்தி செய்ய படுவதாலும், முறையான விளக்கம் சொல்ல படாததாலும் இவற்றை பின் பற்ற இளைய தலைமுறை விரும்புவதில்லை.

சம்ப்ரதாயங்கள் என்பது ஒரு “செய்முறை விளக்கம்” (Standard Operating Procedure (SOP)).  இது அந்தந்த காலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப நடத்தப்படும் சுப நிகழ்ச்சிகள், திருமணங்கள், பண்டிகைகள் ஆகியவற்றை நடத்தும் வழிமுறைகளே சம்ப்ரதாயங்களாக மாறின. ஒவ்வொரு சம்ப்ரதாயத்துக்கும் ஒரு சிறப்பான காரணம் இருந்தது. 

நிகழ்ச்சிகள் நன்றாகவும், சிக்கல்கள் இல்லாமலும் நடைபெறவும் இந்த சம்ப்ரதாயங்கள் பெரிதும் உதவின. இந்த செய்முறை விளக்கங்கள் அனைவருக்கும் நல்ல வழி முறையாக இருந்ததால் அனைவராலும் கடைப் பிடிக்கப்பட்டு தலைமுறை, தலைமுறையாக பின்பற்றப் பட்டது.

சம்ப்ரதாயங்கள் சரி அல்லது தவறு என்பதை விட அந்தந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு உதவியாக இருந்தது. அடுத்து வந்த காலங்களில் தேவைகளுக்கு ஏற்ப சம்ப்ரதாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு இன்றும் கடைபிடிக்கப் பட்டு வருகின்றன.

முந்தய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் சம்ப்ரதாயங்களே பாலமாக விளங்குகின்றது. அன்றைய காலத்தில் இருந்த வாழ்க்கை முறைகளையும் பழக்க வழக்கங்களையும் சம்ப்ரதாயங்களை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சியே (evolution) சம்ப்ரதாயங்களின் பரிணாம வளர்ச்சி. சமுதாய பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள வேண்டுமானால் நாம் சம்ப்ரதாயங்களின் பொருளையும் அதன் அவசியத்தையும், கால நேரத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும், அதன் கட்டுப்பாட்டையும், அதன் ஸ்திர தன்மையும் (stability)  காட்டும் கால கண்ணாடியே சம்ப்ரதாயங்கள். அர்த்தமுள்ள சம்ப்ரதாயங்களே ஒரு அழகான சமூகத்தின் அடையாளம். சம்ப்ரதாயங்களை ஆராய்ந்து அறிதல் மூலம் ஒரு சமூகம் கடந்து வந்த மாற்றங்களை நம்மால் உணர முடியும்.

ஒரு சமூகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் “செய்முறை விளக்கங்கள் (SOP) எழுதி வைக்க படாத காலத்தில் இந்த சம்ப்ரதாயங்கள் மூலமே அவை பின் பற்ற பட்டன. எப்படி மரபு அணுக்களில் (Chromosome) நம் பரிணாம வளர்ச்சி (evolution) பதிவு செய்ய பட்டு உள்ளதோ அது போலவே ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியும் சம்ப்ரதாயங்களில் பதிவு செய்யப் பட்டது.

சம்ப்ரதாயங்கள் பற்றி நமக்கு தெளிவு இல்லாமலும் அதன் பொருள் புரியாமலும் இருந்தால் காலம் காலமாக வரும் சமுதாய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியாது.

பார்வை தொடரும்..............

1 comment:

  1. Dr. முருகன் அவர்களே தங்களுடய இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்முடய முன்னோர்களால் வரயருக்க பற்ற ஒன்று. எத்தனயோ சம்பிரதாயங்கள் தற்போது நம்முடய வசதிக்காக மாற்றப்பட்டு விட்டன. இதற்கான முக்கியமான காரணம் தாங்கள் கூறியதை போல முன்னோர்களால் சரியான விளக்கம் அளிக்கப்படாததால் தான். நம்முடய இன்றய தலைமுறை வளர்ந்து வரும் விஞ்ஞானத்தால் முன்னோர்களால் பின்பற்ற பற்ற சம்பிரதாயங்களை பின்பற்றும் நிலையில் இல்லை.

    ஆனால் இந்த சம்பிரதாயங்களை ஒருபக்கம் பார்க்கும் போது நிச்சயமாக பின்பற்றபட வேண்டும். ஆனால், மறுபக்கம் நம்முடய இந்த தலைமுறையால் பல மூட நம்பிக்கைகள் சார்ந்த சம்பிரதாயங்கள் அடியோடு கைவிடப்பட்டுவிட்டன. இதனால் நமக்கு தெரியாமலயே நம்முடய சமுதாயாத்திற்கு சில நன்மைகள் நடந்து பரிமாண வளர்ச்சி பெற்றுவிட்டன.

    இன்னும் தாங்கள் இந்த தலைப்பில் விரிவாக விவாதிக்க என்னுடய வாழ்த்துககள்.

    ReplyDelete